மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஹீரோ என்றால் இப்படித்தான் என்ட்ரி கொடுக்க வேண்டும். இப்படித்தான் பில்டப் கொடுக்க வேண்டும் என்றொரு கோலிவுட் கோட்பாடு இருந்தும் அதிலிருந்து மீறி, நான் கதையின் நாயகன். எனக்கு எந்தவொரு வெட்டி பில்டப்பும் தேவையில்லை என்று நடித்து வருபவர் விஜயசேதுபதி.
அதோடு, தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே ரம்மி என்ற படத்தில் இனிகோ பிரபாகரன் ஹீரோவாக நடிக்க, தான் அவரது நண்பன் வேடத்தில் நடித்தார் விஜயசேதுபதி. இதெல்லாம் உச்சநிலையில் இருக்கும் எந்தவொரு ஹீரோக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜயசேதுபதி நடித்தார்.
இப்போதுகூட அவர் எந்தவித பில்டப்பையோ, ஹீரோயிசத்தையோ விரும்பவில்லைதான். என்றாலும், மார்க்கெட்டில் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். அப்போதுதான் நடிக்கும் படங்களின் வியாபாரம் இறங்காமல் இருக்கும் என்பதால், ஆரஞ்சு மிட்டாய் படத்தில் இருந்து தனது பரபரப்பான பப்ளிசிட்டிகளை ஆரம்பிக்கப்போகிறாராம் விஜயசேதுபதி, இனிமேல் அவர் படங்களின் ப்ரமோஷன்கள் புதுமையான முறையில் செய்யப்பட உள்ளதாம்.