மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமா எப்போதுமே விசித்திரங்களின் இருப்பிடம். அதற்கு ஒரு உதாரணம் இயக்குனர்கள் ஏ.எல்.விஜய்யும், ஜெயம்ராஜாவும். "இயக்குனர் ஏ.எல்.விஜய் என்று என்னை குறிப்பிடாதீர்கள் வெறும் விஜய் என்றே குறிப்பிடுங்கள் என்று மீடியாக்களிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏ.எல். என்பது ஏ.எல்.அழகப்பன் என தந்தையை குறிக்கிற இன்ஷியல்.
ஆனால் ஜெயம்ராஜா இதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறார். ஜெயம் ராஜாவின் முதல் படம் ஜெயம். ரவி அறிமுகமான படமும் இதுதான். அந்தப் படம் ஹிட்டானதால் ராஜா, தன் பெயரை ஜெயம்ராஜா என்றும், ரவி தன் பெயரை ஜெயம்ரவி என்றும் வைத்துக் கொண்டனர். தற்போது ஜெயம்ராஜா தனி ஒருவன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தன் பெயரை மோகன் ராஜா என்று மாற்றி வைத்திருக்கிறார் தனது தந்தையான எடிட்டர் மோகன் பெயரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்திருக்கிறார். ஜெயம்ரவி விரைவில் மோகன்ரவி என பெயர் மாற்றலாம் என்கிறார்கள்.