'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
சரத்குமார் இணைய தளங்களில் தீவிரமாக செயல்படுறவர். அடிப்படையில் அவர் பத்திரிகையாளர் என்பதால் நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்துக்களை பேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்து விடுவர். பேஸ்புக்கின் கவர் போட்டோவையும் அடிக்கடி மாற்றுவார். சமீபகாலமாக அவர் பேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள போட்டோ அவரது ரசிகர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஒரு பாரில் அவர் மதுக்கோப்பையுடன் போஸ் கொடுக்கும் படங்கள் அவை. ஒரு மேஜையின் மீது மது உயர்ந்த வகை மதுபாட்டில் இருக்க மது கோப்பையுடன் அவர் ஸ்டைலாக நிற்கும் படம் இடம் பெற்றுள்ளது. இது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டதா, அல்லது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் மது குடிப்பதை ஸ்டைலான ஒரு பழக்கம் என்று சொல்வது போல உள்ளது.
"சரத்குமார் நடிகர் மட்டுமல்ல, ஒரு அரசியல் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர். இப்படி பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் இதுபோன்ற படத்தை வெளியிடலாமா?" என்பதுதான் ரசிகர்களின் கேள்வி.