மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் திரையுலகில் 70களின் கடைசியில் ஜெயப்பிரதா, ஜெயசுதா என இந்த இரண்டு 'ஜெய' நடிகைகளும் தொடர்ந்து ஜெயத்தைக் குவித்து வந்தனர். அதன் பின் இங்கிருந்து அப்படியே தெலுங்குப் பக்கம் போய் அங்கும் முன்னணி ஹீரோயின்களாக வலம் வந்தனர். பல முன்னணி ஹீரோக்களுடன் இருவருமே ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளனர்.
இவர்களிருவருமே அவரவர் மகன்களை ஹீரோக்களாக அறிமுகப்படுத்துகின்றனர். ஜெயப்பிரதா மகன் சித்து நாயகனாக நடிக்கும் 'உயிரே உயிரே' படம் இனிமேல்தான் வர உள்ளது. ஆனால், ஜெயசுதா மகன் ஸ்ரேயன் நாயகனாக நடித்துள்ள 'பாஸ்தி' தெலுங்குத் திரைப்படம் ஜுலை 3ம் தேதி வெளியாகிவிட்டது. மகனை அறிமுகப்படுத்துவதில் ஜெயப்பிரதாவை, ஜெயசுதா முந்திவிட்டார். தன் மகனை தமிழ்ப் படத்தில்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என நான் இருந்தேன் என 'உயிரே உயிரே' படத்தின் இசை வெளியீட்டிலேயே ஜெயப்பிரதா தெரிவித்திருந்தார்.