விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஒருகாலத்தில், விஜயகாந்தைப் போல இருக்கிறார் என்று பேசப்பட்டவர் நடிகர் சரவணன். வைதேகி வந்தாச்சு, தாய் மனசு எனப் பல படங்களில் நடித்த அவர் பெரிதாக வர முடியவில்லை. எனவே குணச்சித்திர வேடங்களில் பாதைமாறினார். பருத்திவீரன் நல்ல பெயரையும் புகழையும் தேடித்தந்தது. அதில் கார்த்தியின் சித்தப்பாவாக வந்தார். அந்த குற்றவாளி கோஷ்டியில் ஒருவராக நடித்திருப்பார். அந்த சித்தப்பு வார்த்தை இப்போதும் சமூக வலைதளங்களில் பிரபலம். கலக்கு சித்தப்பு என்று கமெண்ட் இன்றும் போடுகிறார்கள். அப்படிப்பட்ட சரவணன் பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் எடை கூடி விட்டது. வில்லன் தாதா வேடத்துக்கு மட்டுமே கூப்பிட்டனர்.
சிரமப்பட்டு எடையைக் குறைத்தார். இப்படி 26 கிலோ எடை குறைத்தார். விளைவு டூயட் பாடும் வாய்ப்பு வந்தது. சீனி படத்தில் ஓவியாவுடன் டூயட் பாடுகிறார் என்றால் சாதாரண விஷயமா? என்ன கொடுமை சரவணா இது என்று கூற வைக்கிறதல்லவா?. ஒரு தலையாக காதலித்து கனவுகண்டு பாட்டு பாடுவதாக நடித்துள்ளார். கனவாக இருந்தாலும் நிஜத்தில் ஓவியா நடித்துதானே ஆக வேண்டும்? அந்த வகையில் சரவணனுக்கு அதிர்ஷ்டம் தான், முன்னேற்றம்தான். இன்னமும் தொப்பையைக் குறைத்தால் இலியானாவுடன் கூட டூயட் பாடலாம். செய்வாரா?