கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
சிம்பு - ஹன்சிகா இருவரும் இணைந்து நடிக்க வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்கள் சிறிய இடைவெளியில் சில வருடங்களுக்கு முன் ஆரம்பமானது. ஆனால், வேட்டை மன்னன் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் கைவிடப்பட்டது. ஆனால், வாலு படம் தட்டுத் தடுமாறி படப்பிடிப்பு நடந்து ஒரு வழியாக அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இன்னும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள தாறுமாறு... என்ற பாடலுக்கு படப்பிடிப்பு நடத்தப்படாமல் உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் காதலிக்க ஆரம்பித்து, அதையும் அறிவித்து, பின்னர் சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள்.
அதனால், அந்தப் பாடலை இதுவரை படம் பிடிக்காமலே இருந்தார்கள். இடையில் அந்தப் பாடலில் சில முன்னாள் ஹீரோயின்களை நடிக்க வைத்து படப்பிடிப்பை முடித்துவிடலாமா என்று கூட நினைத்திருந்தார்கள். அதற்காக சிம்ரன், மீனா ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள் என்று கூட செய்திகள் வெளிவந்தன. ஆனால், இப்போது ஹன்சிகாவே அந்தப் பாடலில் நடித்துத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அநேகமாக இன்னும் சில நாட்களில் அந்தப் பாடலின் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. . அதிரடியான நடனப் பாடலாக இந்தப் பாடலைப் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஹன்சிகா திடீரென சிம்புவுடன் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.