விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீராகதிரவன் அதையடுத்து இயக்கியுள்ள படம் விழித்திரு. இந்த படத்துக்கு சத்யன் மகாலிங்கம் என்ற புதியவர் இசையமைத்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், டி.இமான் உள்பட 7 இசையமைப்பாளர்களை அவர் பின்னணி பாட வைத்திருக்கிறாராம். மேலும், இதுவரை தான் இயக்கிய அல்லது இசையமைத்த படங்களில் மட்டுமே பாடல் எழுதியிருக்கும் டி.ராஜேந்தர், முதன்முறையாக இந்த படத்தில் இன்னொருவரின் இசையில் பாடல் எழுதியிருப்பவர், அந்த பாடலை தானே பாடி இரண்டு கவர்ச்சி நடிகைகளுடன் இணைந்து செம குத்தாட்டம் ஆடியிருக்கிறார். மேலும், அப்படத்தில் புதிய மியூசிக் டைரக்டரின் இசையில் பாடுகிறோம் என்று நினைக்காமல், பாடல் நன்றாக வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் 3 நாட்கள் அவ்வப்போது வந்து பாடிக்கொடுத்தாராம். ஏற்கனவே பாடி முடித்த பிறகும் அவருக்கு பாடியதில் ஏதோ கரெக்சன் தெரிந்தால் மறுபடியும் வந்து பாடிக்கொடுத்தாராம். அந்த அளவுக்கு தனது தொழில் பக்தியை நிரூபித்திருக்கிறார் டி.ஆர்.,