மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கலகலப்பு, பீட்சா, சூதுகவ்வும், யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா என பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தவர் கருணாகரன். அதையடுத்து ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தில் அவர் ஹீரோவாகி விட்டார். பத்ரி இயக்கிய அந்த படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக அஞ்சாதே விஜயலட்சுமி நடித்தார்.
ஆக, அப்படத்தில் விஜயலட்சுமியுடன் டூயட் பாடிய கருணாகரன், அதன்பிறகு மீண்டும் காமெடியனாக பல படங்களில் நடித்து வந்தபோதும், தற்போது மொழி ராதாமோகன் இயக்கியுள்ள உப்புக்கருவாடு படத்தில் அட்டகத்தி நந்திதாவுடன் டூயட் பாடியுள்ளார்.
மேலும், கடலோரக்கவிதைகள் படம் போன்று இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கடற்கரை பகுதிகளில்தான் நடைபெற்றுள்ளதாம். கருணாகரன்-நந்திதாவின் காதல் காட்சிகள் மற்றும் டூயட் பாடல்கள் கூட இதே லொகேசன்களில் தான் படமாகியிருக்கிறதாம். குறிப்பாக, தனது வழக்கமான நடிப்பில் இருந்து விடுபட்டு அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கும் கருணாகரன், இந்த படத்திற்கு பிறகு தனது இமேஜ் இன்னும் ஒரு படி உயரும் என்று எதிர்பார்க்கிறாராம்.