மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமாவில் ஹீரோவாகி ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை. பத்து படங்கள் கூட இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் சொந்தப்படத்தயாரிப்பில் இறங்கினார் விஜய்சேதுபதி. அவரது போட்டியாளராக கருதப்படும் சிவகார்த்திகேயனும் அடுத்து நடிக்க உள்ள படத்தை தன் பேனரிலேயே தயாரிக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு முன்பே ஹீரோவானவர் விமல். சிவகார்த்திகேயனோடு ஒப்பிடும்போது அதிகப்படங்களில் நடித்தவர் விமல்தான். அவரைவிட சீனியரும் கூட.
தன்னைவிட ஜூனியரான சிவகார்த்திகேயன் சொந்தப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டநிலையில் விமல் மட்டும் வேடிக்கை பார்ப்பாரா என்ன?
வெளியே தெரியாமல் அவரும் சொந்தப்படம் தயாரித்து வருகிறார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன் தயாரிப்பில் தற்போது விமல் நடித்து வரும் படம் மாப்ள சிங்கம்.
இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை தன் மானேஜைரை வைத்து ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் லைன் புரொடியூஸராக இருந்து விமலே தயாரித்துள்ளார்.