மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"பேஸ்புக், இணைய தளங்களில் தவறாக சித்தரித்து என்னை ஒழிக்க நினைக்கிறார்கள். புதைக்க புதைக்க முளைப்பவன் இந்த சினேகன்" என்று சினேகன் ஆவேசமாக கூறினார்.
சாந்தன் பட பாடல் வெளியீட்டு விழாவில் சினேகன் பேசியதாவது: என்னை கட்டிப்பிடி பாடலாசியர் என்று விமர்சிக்கிறார்கள். ஒரு அமைப்பின் கருத்துக்கள், சேவைகள் பிடித்து அந்த அமைப்பில் சேர்ந்தேன். அன்பை பரிமாறிக்கொள்ள ஆரத் தழுவிக்கொள்ளுதல் அந்த அமைப்பின் விதிமுறை. அதை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த அமைப்பு வழங்கிய மனநல பயிற்சிகள் கட்டிப்பிடித்தல் என்னை மாற்றியது. ஆனால் அந்த அமைப்பு அதன் மூலம் ஒரு மதத்தை பரப்ப முயன்றபோது அதிலிருந்து நான் விலகிக் கொண்டேன்.