மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை த்ரிஷா டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் "திருமணமும் செய்து கொள்வேன். தொடர்ந்து நடிக்கவும் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.
சில முக்கிய கேள்வி பதில்கள் வருமாறு:
கேள்வி: உங்களின் அடுத்த ப்ராஜக்ட்?
பதில்: கமல் சாருடன் தூங்காவனம்
கேள்வி: தூங்காவனத்தில் என்ன மாதரியான கேரக்டர்?
பதில்: நான் இதுவரை நடித்திரா கேரக்டர், நீங்கள் இதுவரை பார்த்திராத கேரக்டர்.
கேள்வி: தூங்காவனம் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள்?
பதில்: உங்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் ஹாரர் கதை.
கேள்வி: யாருடன் நடிக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது?
பதில்: ரஜினி.... ரஜினி... ரஜினி...
கேள்வி: எதிர்கால திட்டம் என்ன?
பதில்: திருமணம் செய்து கொள்வேன். இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். ஒரு விலங்கு பண்ணை வைப்பேன். அதை சுற்றி வெள்ளை கலரில் வேலி அமைப்பேன். அப்புறம் எல்லா பெண்களையும்போல வீட்டு வேலை செய்வேன்.
கேள்வி: 10 வருடங்களுக்கு பிறகு என்னவாக இருப்பீர்கள்?
பதில்: கடைசி வரை நடித்துக் கொண்டிருப்பேன்.
கேள்வி: ஜோதிகாவின் ரீ எண்ட்ரி பற்றி...?
பதில்: என்னை போன்றவர்களுக்கு அவர்தான் உந்து சக்தி
கேள்வி: சமந்தா பற்றி...?
பதில்: அவர் என் சமந்தா...
கேள்வி: நயன்தாரா பற்றி....?
பதில்: நாம் எப்படி அவரை பார்க்கிறோமோ அதுவாக அவர் இருப்பார்.
கேள்வி: ரசிகர்கள் பற்றி...?
பதில்: அவர்கள் இன்றி நான் இல்லை
கேள்வி: கேரளா பற்றி...?
பதில்: என் சொந்த ஊர்?
கேள்வி: அம்மா பற்றி...?
பதில்: அம்மா எனக்கு எல்லாம்...
கேள்வி: அப்பா பற்றி...?
பதில்: அவரை நிறைய மிஸ் பண்றேன்.
கேள்வி: ராணாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
பதில்: ஏன் நடிக்க கூடாது?
கேள்வி: மீண்டும் இந்தியில் நடிப்பீர்களா?
பதில்: என்னை அப்படியே தூக்கி பிடிக்கிறமாதிரி கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன்.
கேள்வி: வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்?
பதில்: வாழ்க்கையை ரொம்ப சீரிசா எடுத்துக்க கூடாது.
கேள்வி: 10 வருடத்துக்கு மேல் சினிமாவில் இருக்கீறீர்களே எப்படி?
லக், குவாலிட்டி, ஓவர் குவாண்டிட்டி