மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வெங்கட்பிரபு படங்களில் சிவா, பிரேம்ஜி போன்று தானும் ஒரு கேரக்டரில் நடித்து வந்தவர் வைபவ். இதில் மங்காத்தா படத்தில் நடித்தபோது பேசப்பட்ட அவர், பின்னர் ஷோலோ ஹீரோவாக டமால் டுமீல், கப்பல் போன்ற படங்களில் நடித்தார். இதில், கப்பல் வைபவ்க்கு பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனபோதும் அடுத்தபடியாக அவருக்கு மெயின் ஹீரோ வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். அதையடுத்து மாஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த வைபவ்க்கு இப்போது நடிகை குஷ்பு தான் தயாரிக்கும் படத்தில் ஹீரோ வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
கப்பல் படத்தின் வெற்றிக்குப்பிறகு அவரை இந்த படத்தில் நடிக்கத்தான் அழைத்தார்களாம். ஆனால் அந்த நேரத்தில் ஆம்பள படப்பிடிப்பு முதலில் தொடங்கியதால் அதிலும் ஒரு கேரக்டரில் நடிக்குமாறு சுந்தர்.சி கேட்டுக்கொண்டாராம். அதன்காரணமாக தனது புரொடக்சன் தயாரிக்கும் பட வேலைகளை சற்று தள்ளி வைத்தார் குஷ்பு.