மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த வருடத்தில் மியா ஜார்ஜ், கீர்த்தி சுரேஷ், நிக்கி கல்ராணி ஆகியோர் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தனர். இதில் நிக்கி கன்னடத்துக்காரர் என்றாலும் மலையாள சினிமா தான் அவரை ஹீரோயினாக்கி அழகுபார்த்து இங்கே அனுப்பி வைத்தது. இருந்தாலும் கூட தமிழ்சினிமா கதாநாயகி பஞ்சத்தால் தத்தளிக்காமல் இருப்பதற்காகவோ என்னவோ மலையாளத்தில் இந்த ஆறு மாதத்தில் மட்டுமே ஏழு ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன் இப்போது தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அடுத்ததாக 'பிரேமம்' படத்தில் அறிமுகமான மடோனா செபாஸ்டின், தமிழில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்கவுள்ளார். இதுதவிர லால்ஜோஸ் தனது 'நீ-நா' படத்தில் அறிமுகப்படுத்தியுள்ள மிஸ் கேரளா அழகியான தீப்தி சதியும் நம்பிக்கை தருகிறார்.