Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா

31 மே, 2015 - 04:33 IST
எழுத்தின் அளவு:
K.Balachander-theatre-opening

தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப்பட்டது உதவி இயக்குனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரை யிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கிற்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் நினைவாக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டு. இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் திறக்கப்பட்டது.


நாற்பது உதவி இயக்குனர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டது. இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று இயக்கிய உதவி இயக்குனர்களை இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டினார். பாலசந்தர் தமிழ் திரையுலகில் பல வெற்றிகளை கண்டவர். பல சாதனைகளை பதிவு செய்தவர். அவரைப் போலவே இளம் இயக்குனர்களும், நாளைய இயக்குனர்களும் தங்களது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என்று பாரதிராஜா பேசினார்.


விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி .வாசு,கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கிய உதவி இயக்குனர்களை பாராட்டி பேசினார்கள். கே.பாக்யராஜ் அவர்கள் சங்கத்தின் தமிழ் வெள்ளித் திரை என்ற இணையதளத்தை துவைக்கி வைத்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி. எஸ்.தாணு அவர்கள் கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரை பற்றிய குறும்படங்களை துவைக்கி வைத்தார்.


தலைவர் திரு. விக்ரமன் அவர்கள் எல்லோரையும் வரவேற்று பேசினார். செயலாளர் திரு.ஆர்கே.செல்வமணி, பொருளாளர் திரு. வி.சேகர் இருவரும் சிறப்புரையாற்றினார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in