நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை நினைத்துப்பார்த்து அவர்களுக்கு உதவி செய்யும் ஹீரோக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்படிப்பட்ட நடிகர்களை பட்டியல் போட்டால் அதில் முதலிடம் விமலுக்குத்தான். அந்தளவுக்கு தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வார். அவர் நடித்த ஜன்னலோரம் படத்தின் ரிலீஸ் அன்று, படம் வெளியாக முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டது. அப்போது, தன் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்ததோடு மட்டுமின்றி, மேற்கொண்டு 50 லட்சம் பணத்தைப் புரட்டிக் கொடுத்து அந்தப்படத்தை ரிலீஸ் பண்ண வைத்தார் விமல். இதுபோல் பல படங்களின் ரிலீஸ் நேரத்தில் உதவிகள் செய்தவர் அவர்.
தற்போது காவல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விமல். அந்தப்படம் முடிவடைந்து வருடக்கணக்காகிறது. இன்னும் படம் பிசினஸ் ஆகவில்லை.