சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்த மீகாமன் படத்தில் வில்லன் கோஷ்டியில் முக்கிய நபராக நடித்தவர் ஆத்மா. அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் வில்லன்களில் ஒருவராக நடித்தார். அப்போது, ஒரு காட்சியில் அஜித்தையே கலாய்க்கும் காட்சியில் நடித்து அஜித் ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார். இப்போது தனுஷ் தயாரிப்பில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்து வரும் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஆனந்த்ராஜ் மெயின் வில்லனாக நடிக்க, அவரது டீமில் இருக்கும் இன்னொரு வில்லனாக நடித்து வருகிறார் ஆத்மா. இவருக்கு விஜயசேதுபதியுடன் ஒரு நேரடி சண்டை காட்சியும் இந்த படத்தில் உள்ளதாம்.
இந்த நிலையில், மாயா பவனம் என்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஆத்மா. இப்படத்தை ஜெகன்மோகன் என்பவர் இயக்குகிறார். இப்படம் பற்றி ஆத்மா கூறுகையில், இந்த மாயாபவனம் படம் 1936ல் நடக்கும் கதையில் உருவாகிறது. மாயாபவனம் என்ற கிராமத்தில் வாழ்ந்த ஒரு காதல் ஜோடியைப் பற்றியதுதான் இந்த படம். அந்த கிராமத்தில் ராஜாவுக்கு இணையாக வாழ்ந்த ஒரு கேரக்டர். ஊருக்கு நல்லது செய்பவர். அந்த நபர் 6 அடி உயரத்துக்கு மேல் இருப்பார் என்பதால், அதற்கேற்ற நடிகரைதேடி வந்தபோது என்னைப்பற்றி கேள்விப்பட்டு தொடர்பு கொண்டார்கள்.
அவர்களது கதைக்கு எனது உருவம் மேட்சாக இருந்ததால் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து விட்டனர். அவர்கள் சொன்ன அரசர் காலத்து கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறேன். மேலும், மாயாபவனம் படத்தில் எனது கெட்டப்பை பார்த்துவிட்டு மறைந்த நடிகர் ரங்காராவ் போன்று நான் இருப்பதாக சொன்னார்கள். அது ரொம்ப சந்தோசமாக இருந்தது.
அதோடு, ஹீரோ வேடம் என்பதால் எனக்கு டயலாக் மற்றும் பர்பார்மென்ஸ் பண்ணுவதற்கும் நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக, எனது நடிப்பதைப் பார்த்து ஸ்பாட்டில் இருந்தவர்கள் கைதட்டல் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். அதனால் எனக்கான ஈடுபாடு இன்னும் அதிகமாகி சிறப்பாக நடித்தேன். இப்படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது. அவரிடத்தில், தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பீர்களா? என்று கேட்டால், பெரிய வில்லன் நடிகராக வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. நான் ஹீரோவாக நடித்தது ஒரு விபத்துதான். இந்த மாயாபவனம் படத்தில் 6 அடி உயரம் கொண்ட ஹீரோ என்பதோடு, அது எனக்கு பொருத்தமாக இருந்ததால்தான் நடித்தேன். மற்றபடி ஹீரோ வேடங்களில்தான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. ஹீரோவோ? வில்லனோ? எதுவாக இருந்தாலும் எனக்கு செட்டாகக்கூடிய கேரக்டர்களாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார் ஆத்மா.