ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும் டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகருமான மஞ்சு மனோஜுக்கும், ப்ரணதி ரெட்டிக்கும் மே 20 தேதி நேற்று பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்களுக்கும் திரை உலக பிரபலங்களுக்கும் இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்பட ஏழு மாநில ஆளுநர்களும் பல்வேறு அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர். நடிகர் மோகன் பாபுவின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். இதற்காக திருமணத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. 700 தனியார் பாதுகாப்பு படையினருடன் 2000 போலீசாரும் திருமண நிகழ்வின் போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.