மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சந்தானம் நாயகனாக நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்தவர் ஆஷ்னா சாவேரி. அதையடுத்து தான் நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்திலும் அவரையே நாயகியாக்கியிருக்கிறார் சந்தானம். முதல் படத்தைவிட இந்த படத்தில் சந்தானத்துடன் அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ள ஆஷ்னா, பாடல் காட்சிகளில் அதிக கிளாமராகவும் நடித்துள்ளாராம். அப்படி அவர் நடித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற ஆர்யா, அவர்களின் ஜோடியை ரொம்ப பெருமையாக பேசிக்கொண்டிருந்தாராம்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சந்தானத்துடன் இரண்டு படங்களில் நடித்து விட்டேன். அடுத்து வேறு ஹீரோக்களுடனும் டூயட் பாட ஆசைப்படுகிறேன். அது ஏன் நீங்களாக இருக்கக்கூடாது என்றாராம். ஏற்கனவே நடிகைகளுக்கு சிபாரிசு செய்வதில் முதல் ஆளாக இருந்து வரும் ஆர்யா, இப்போது கமிட்டான படங்களுக்கு ஹீரோயினி ஓகே ஆகிவிட்டது. அதனால் நான் புதிதாக கமிட்டாகும் படங்களில் சிபாரிசு செய்கிறேன் என்று கூறியுள்ளாராம்.