மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை நயன்தாராவுக்கும், நானும் ரௌடிதான் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் உள்ள சர்ச்சில் கடந்த வாரம் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நாயகி. படப்பிடிப்பின் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி இருவரும் காதலில் விழுந்த்தாகச் சொல்லப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மொரீஷியஸ் தீவிற்கு சுற்றுலா சென்று வந்ததாகவும், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா காஸ்ட்லியான கார் ஒன்றை பரிசளித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே தன்னுடைய பெற்றோர்களிடம் நயன்தாரா, விக்னேஷ் சிவனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கிடையே உள்ள காதலைப் பற்றிச் சொல்லி விட்டார் என்கிறார்கள். இப்போது பெற்றோர் சம்மதத்துடன் நெருங்கிய உறவினர்கள், சில முக்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள கடந்த வாரம் இருவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாகச் சொல்கிறார்கள்.