மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் தனுஷ், காஜல்அகர்வால் இருவரும் சில வருடங்களுக்கு முன்பே இணைந்து நடிக்க வேண்டியது. ஆனால், கால்சீட் ப்ராபளம் காரணமாக அவர்களை இணைக்கும் முயற்சி கைகூடாமல் போனது. ஆனால், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் படங்களை இயக்கிய பாலாஜி மோகன் மாரி படத்தில் தனுசுடன் காஜல்அகர்வாலை இணைத்து விட்டார். அதோடு, இந்த படத்தில் அவர்களுக்கிடையிலான லவ் போர்ஷன் சமீபகால தனுஷின் படங்களை விட சற்று ஜாஸ்தியாக உள்ளதாம். அதோடு நெருக்கமாகவும் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த காட்சிகளில் தனுஷ் கொடுத்த ரொமான்டிக் லுக், பர்பாமென்ஸில் கிறங்கிப்போனாராம் காஜல்அகர்வால்.
அவரது ஒவ்வொரு அசைவுகளும் ரொம்பவே இயல்பாக இருந்தது. நான் எத்தனையோ மெகா ஹீரோக்களுடன் நடித்தபோதும் தனுஷிடம் ஒரு தனித்துவமான நடிப்பை கவனித்தேன் என்று கூறி வரும் காஜல்அகர்வால், அவரது நடிப்பு பல இடங்களில் என்னை அசர வைத்திருக்கிறது. அதோடு, அடுத்தடுத்து தனுசுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது என்கிறார்.