குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
'மாஸ்' படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என கடந்த சில நாட்களாக சில மீடியாக்களில் செய்திகள் வந்தன. ஆனால், தமன்னா எங்களது படப்பிடிப்புத் தளம் பக்கமே வரவில்லை என அடித்துச் சொல்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் அப்படி வந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை என்றார் .
எங்களது படத்தில் தமனும் இல்லை. தமன் ஆர்க்கெஸ்ட்ரேஷன் அமைத்த பாடல் ஒன்றை படமாக்கினோம். ஆனால், படத்தின் வேகத்திற்கு அந்தப் பாடல் இடைஞ்சலாக இருக்கும் என்று கருதியதால் அந்தப் பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை. கண்டிப்பாக அடுத்தப் படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்துவேன் என்று வெங்கட் பிரபு அழுத்திச் சொன்னார். அப்போது பக்கத்தில் எந்த சலனமும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார் படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.
யுவன் இசையமைத்த ஒரு குத்துப் பாடல் திருப்தியாக இல்லையென சூர்யா சொன்னதால், தமன் இசையைமத்த ஒரு பாடலைப் படமாக்கினார்கள். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட யுவன்ஷங்கர் ராஜா, தொடர்ந்து படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். அதன் பிறகு சில சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. 'மாஸ்' படத்தின் இசையமைப்பாளர் யுவன்தான் என வெங்கட்பிரபுவே அறிவித்தார்.
இப்போது 'மாஸ்' படத்தில் தமன் இசையமைத்த பாடலை முழுவதுமாகவே நீக்கி விட்டார்கள். யுவன் கோபப்பட்டதுதான் இதற்குப் பின்னணி என்கிறார்கள். ஆனாலும், 'மாஸ்' படத்தின் பாடல்கள் தற்போது ஹிட்டாகி வருகின்றன.
அதே சமயம், 'மாஸ்' படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலை தனது அடுத்த படத்திற்கு பயன்படுத்துவதாக வெங்கட் பிரபு அறிவித்தது தமனையும் சமாதானப்படுத்தவே என்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலை எப்படி வேறொரு படத்திற்குப் பயன்படுத்த முடியும் ?. அது வெங்கட்பிரபுவுக்கே வெளிச்சம்.