ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
டீத்தூள் நல்லா இருக்கு. ஆனா அத பேக்கிங் பண்ணியிருக்கிற டப்பா தான் சரியில்ல... ஆண்ட்ரியா சொல்றது கூட கிட்டத்தட்ட இது மாதிரிதான்.. ஏதாவது புரியுதா..? விஷயத்துக்கு வருவோம்.. சினிமாவில் ஒரு சுதந்திர பறவை போல ஆண்ட்ரியா பாடுகிறார், நடிக்கிறார்.. தனக்கு பிடித்த படம் என்றால் தான் ஒகே.. இல்லையென்றால் எவ்வளவு பெரிய ஹீரோ என்றாலும் வாசல் பக்கம் கை காட்டிவிடுவாராம். இதுநாள் வரை அவரது திருமணம் பற்றிய பேச்சும் அடிபட்டதாக தெரியவில்லை.
சமீபத்தில் ஒரு பேட்டியில் எந்தமாதிரி நபரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் என கேட்டபோது, “ரசூல் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்குவேன்.. ஆனா அப்படிப்பட்ட ஆளை இன்னும் நான் பார்க்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார் ஆண்ட்ரியா. யார் இந்த ரசூல்..? மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'அன்னயும் ரசூலும்' என்கிற படத்தில் ஆண்ட்ரியா நடித்தார் அல்லவா..? அந்தப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்தின் பெயர் தான் ரசூல்.. கதாநாயகியை உருகி உருகி காதலிக்கும் கதாபாத்திரம் தான் அந்த ரசூல் கதாபாத்திரம்.. அப்படி ஒரு நபரைத்தான் திருமணம் செய்வாராம் ஆண்ட்ரியா.