மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
புவனக்காடு படத்தையடுத்து விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள படம் அவன் அவள். இந்த படத்தை அவரே தயாரித்திருக்கிறார். ராம்கிருஷ் மிர்னாலி இயக்க, கார்த்திக்ராஜா இசையமைத்திருக்கிறார். இதில் விக்னேஷ்க்கு ஜோடியாக தேவிகா மாதவன், சந்திரிகா என்ற இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒரு சைக்கோ வேடத்தில் விக்னேஷ் நடித்திருக்கிறார். இதுவரை பாசிட்டிவான வேடங்களாக நடித்து வந்த அவர் இந்த படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறாராம். இப்படி விக்னேஷ் வித்தியாசமான கோணத்தில் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் இந்த படம் விற்பனைக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.
ஆனால் இன்னமும் விற்பனை ஆகவில்லை. அதனால் இதுவரை பொறுத்திருந்த விக்னேஷ், இனிமேலும் நாட்களை கடத்தினால் படத்துக்கான வேல்யூ குறைந்து விடும் என்பதால், இப்போது தானே படத்தை ரிலீஸ் செய்கிறாராம். முதலில் மே மாதத்தில் வெளியிட நினைத்தவர், பல பெரிய படங்கள் இந்த மாதத்தில் அணிவகுப்பதால், அடுத்த மாதம் அவன் அவள் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.