போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இருதினங்களுக்கு முன்னர் விஜய் டிவி விருது வழங்கும் விழா சென்னையில் சிறப்பாக நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது நடிகை ஸ்ருதிஹாசனின் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது தன் தந்தை கமல்ஹாசன் ஆடிய ரம் பம் பம் என்ற பாடலுக்கு ஸ்ருதி ஆடினார். கூடவே விழாவை பார்த்து கொண்டிருந்த தன் தந்தை கமலையும் மேடையேற்றி அவரையும் ஆட வைத்தார் ஸ்ருதி.
இதுப்பற்றி ஸ்ருதிஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒரு மகளாக, மேடையில் அப்பாவுடன் ஆடியது என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான சிறப்பான தருணமாக கருதுகிறேன். என் அப்பா தான் பெஸ்ட் என்று கூறியுள்ளார்.