மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பெரும்பாலும் ஹீரோயின்கள் ஹீரோக்களிடம்தான் நட்பு வளர்ப்பார்கள். அந்த நட்பு அவர்களுக்கான படவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும். ஆனால், ப்ரியாஆனந்த், சில ஹீரோக்களிடம் பழகினாலும், சமீபகாலமாக காமெடி காட்சிகளிலும் அதிகமாக நடிக்க வேண்டும் என்ற ஆசைப்படும் அவரது கவனம் தற்போது காமெடியன்களுடன் நட்பு வளர்ப்பதில் திரும்பியிருக்கிறது. அந்த வகையில், எதிர்நீச்சல் படத்தில் நடித்தபோது அந்த படத்தில் காமெடியனாக நடித்த சதீசுடன் நட்பு வளர்க்கத் தொடங்கிய ப்ரியாஆனந்த், அதையடுத்து அவர் நடித்த படங்களில் தான் இடம்பெறாதபோதும், தற்போது வை ராஜா வை படத்தில் அவருடன் நடித்திருக்கிறார்.
அதோடு, காமெடி காட்சிகளில் தான் நடித்தபோது சதீஷிடம்தான் பயிற்சி பெற்றாராம் ப்ரியாஆனந்த். பெரும்பாலும், நாயகன் கெளதமுடன், சதீஷ் நடித்த காட்சிகள் இடம்பெற்றதால், அதே காட்சியில் ப்ரியாஆனந்தும் நடித்தபோது காமெடி டயலாக்குகளை எப்படி எப்படி பேசி நடிக்க வேண்டும் என்று அவருக்கு டிப்ஸ் கொடுத்தாராம் சதீஷ். அதனால், அது தனக்கு பெரிய உதவியாக இருந்தது என்று கூறும் ப்ரியாஆனந்த், தற்போதைய நடிகர்களில் சதீஷ்தான் தனது ஆத்மார்த்தமான நண்பர் என்றும் வெளிப்படையாக கூறுகிறார்.