கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் புதுப்பேட்டை. அந்த படத்தில் அவர் கொக்கி குமார் என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அந்த கொக்கி குமார் கேரக்டரிலேயே தற்போது மனைவி ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
தனுஷ் நடித்த பல படங்கள் ஐஸ்வர்யா தனுசுக்கு பிடிக்கும் என்றாலும் கொக்கி குமார் கேரக்டர் அவரை ரொம்பவே பாதித்ததாம். அதனால்தான் அதே கேரக்டரில் மீண்டும் தனுஷை பார்க்க ஆசைப்பட்டவர் இந்த படத்தில் அவரை மீண்டும் கொக்கி குமாராக கொண்டு வந்திருக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் தனுஷ் என்ட்ரி கொடுப்பது கடைசி க்ளைமாக்சுக்கு கொஞ்சும் முன்புதான் என்றாலும், ஓப்பனிங்கே கலகலப்பாக இருக்குமாம். கேரக்டரில் பெயர்தான் கொக்கி குமார் என்றாலும், புதுப்பேட்டை படத்தின் நடிப்பு சாயல் இல்லாமல் மாறுபட்ட குமாராக வேஷ்டி சட்டை கெட்டப்பில் கலக்கியிருக்கிறாராம் தனுஷ்.