Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி-தனுஷ் இருவருமே நல்ல கமெண்ட் கொடுத்தனர்! - டைரக்டர் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்

25 ஏப், 2015 - 09:49 IST
எழுத்தின் அளவு:
Rajini-and-Dhanush-gave-good-comments-:-Aishwarya-Dhanush

3 படத்தை தனது கணவர் தனுஷை வைத்து இயக்கிய டைரக்டர் ஐஸ்வர்யா தனுஷ், அடுத்தபடியாக கடல் கெளதமை நாயகனாக வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அவருடன் டாப்சி, ப்ரியாஆனந்த், டேனியல் பால்ராஜ் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வருகிற மே 1-ந்தேதி அப்படம் திரைக்கு வருகிறது.


இந்நிலையில், அப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது வை ராஜா வை படம் குறித்து டைரக்டர் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் கூறுகையில், முதலில் நான் இயக்கிய 3 படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். தேவையான லொகேசன்களுக்காக காத்திருந்து படமாக்கியதால் 3 வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. ஆனபோதும் படத்தில் நடித்தவர்கள் ஒருநாள்கூட முகம் சுழிக்காமல் வந்து நடித்துக்கொடுத்தனர்.


முக்கியமாக படத்தில் நடித்துள்ள அனைவருமே கதையின் சூழலுக்கேற்ப வழக்கமான ஸ்டைலில் இருந்து வெளியேறி வந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் கேம்ப்ளிங் இருக்கு. ஆனா கேம்ப்ளிங் படமல்ல. இது புதுமையான கதை. கோவா, பாங்காங், சிங்கப்பூர், ஜப்பான் என பல நாடுகளில் பூக்கள் மலரும் அழகான சீசன்களுக்காக காத்திருந்து பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். இப்படத்தில் கொக்கி குமார் என்றொரு கேரக்டரில் கலகலப்பாக வந்து நடித்திருக்கிறார் தனுஷ். இந்த கேரக்டரை சஸ்பென்சாக வைக்க நினைத்தேன். ஆனால் இணையதளங்களில் வெளியாகி விட்டது.


மேலும், இந்த படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா வித்தியாசமான இசையை கொடுத்துள்ளார். பின்னணி இசையில் அவர் கொடுத்துள்ள புதுமையான சவுண்டு படத்தின் கலரையே மாற்றிவிட்டது. ஆக, வை ராஜா வை படம் நல்லதொரு கமர்சியல் படமாக உருவாகியிருக்கிறது.


அதோடு, இந்த படத்தை எனது தந்தை ரஜினியும், எனது கணவர் தனுசும் பார்த்து விட்ட நல்ல கமெண்ட் கொடுத்தனர். அது எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது. மேலும், தனுஷ் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். என்கரேஜ் ஆக இருக்கிறார். அவர் ஒரு ஸ்டாராக இருந்தும் எனது முதல் படத்தில் நடித்தார். எங்களுக்கிடையே நல்லதொரு புரிதல் உள்ளது. எனது 2வது படத்திலும் அவர் கொக்கி குமாராக நடித்ததை படத்துக்கு ஒரு பெரிய பலமாகவே கருதுகிறேன் என்றார் ஐஸ்வர்யா ஆர். தனுஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in