மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தொண்ணூறுகளில் படிப்படியாக தனது படங்களை குறைத்து வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையை கொண்டுவந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி. படங்களை குறைக்க குறைக்க ரஜினியின் மார்க்கெட் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. வருடத்திற்கு இரண்டு, மூன்று ரஜினி படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள், ரஜினியை வருடத்தில் ஒரு முறைதான், சில நேரம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் திரையில் காணலாம் என்கிற நிலை வந்தவுடன், அவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு உயர ஆரம்பித்தது.
ஆனால் மலையாள சூப்பர்ஸ்டார்கள் இந்த கணக்கிற்குள் வருவதில்லை. மலையாள சினிமாவை பொறுத்தவரை மார்க்கெட்டில் இருக்கும் எந்த நடிகருமே வருடத்தில் குறைந்தது ஐந்து முதல் ஆறு திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வாடிக்கையான ஒன்று. காரணம் சூப்பர்ஸ்டார் என்றாலும் அங்கே சம்பளம் குறைவு என்பதால் நேரத்தை வீணாக்காமல் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம். தவிர விருது விழாக்கள், ஸ்டார் நைட்டுகள் மற்றும் விளம்பரங்கள் என எந்த ரூபத்திலாவது ரசிகர்களுக்கு தரிசனம் தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.