மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நம்ம இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவுக்கு பல ஹீரோயின்களை அறிமுகப்படுத்தி, ஹீரோயின் பஞ்சத்தை தீர்த்து வைத்தது போல மலையாளத்தில் அந்த பணியை செவ்வனே செய்து வருபவர் இயக்குனர் லால்ஜோஸ்., இவர் அறிமுகப்படுத்திய ஹீரோயின்களில் பலர் கொஞ்ச காலம் தமிழ் சினிமாவின் தேவையையும் பூர்த்தி செய்தனர். அப்படிப்பட்ட லால்ஜோஸ் தற்போது பெண்களை மையப்படுத்தி 'நீநா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் புதிய நாயகியாக தீப்தி சதி என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். தீப்தி மும்பையை சேர்ந்தவர் என்றாலும், பாதி மலையாளி தான். இவரை டெஸ்ட் வைத்து தேர்வு செய்வதற்கு முன் லால்ஜோஸ் போட்ட முக்கிய கண்டிசன் அவரது கூந்தலை பாதியாக வெட்டிவிடவேண்டும் என்பதுதான். அதற்கு முதலில் தீப்தி தயங்கினாலும், லால் ஜோஸின் ஹீரோயின்கள் அடைந்த புகழும் பெயரும் ஞாபகத்திற்கு வரவே உடனே சரி என்று சொல்லிவிட்டாராம். இந்த காதபாத்திரத்தில் நடிக்க ஆண்ட்ரியாவை அழைத்தபோது தான் அவர் முடியை வெட்ட மறுத்து விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.