'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
'3' படத்தில், ''ஒய்திஸ் கொலவெறி...'' பாடலை பாடி உலகளவில் பிரபலமடைந்த தனுஷ், அதன்பின்னர் தொடர்ந்து தனது படங்களில் பாடல் பாடி வருகிறார். கூடவே பாடலாசிரியராகவும் மாறியுள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் தனுஷ் தான் எழுதினார். நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டும் தனுஷ், தமிழ் தாண்டி இப்போது கன்னடத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
கன்னடத்தின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், ''வஜ்ரகயா'' எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என படக்குழு கருத, அவரிடம் கேட்டுள்ளனர். தனுஷூம் ஓ.கே., சொல்ல சமீபத்தில் இப்பாடல் பதிவானது. ''நோ பிராப்ளம்...'' என்ற ஒரு ஸ்டைலிஷான பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். தனுஷ் பாடியிருக்கும் இப்பாடல் அருமையாக வந்திருப்பதாகவும், இப்படத்திற்கு இது ஒரு ப்ளஸ் என்றும் படக்குழு ஒரு நம்பிக்கை தெரிவித்துள்ளது.