'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழ் திரையில் கும்கி நாயகன் விக்ரம் பிரபு மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் நடிப்பில் திரைக்கு வந்த படம் அரிமா நம்பி. எதிர்பார்த்த அளவு இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும், இப்படம் பேசும் படி வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கு திரையில் டைனமைட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. தெலுங்கு திரையின் இளம் நாயகன மஞ்சு விஷ்ணு இப்படத்தின் நாயகனாக நடித்து வருகின்றார். இயக்குநர் தேவா கட்டா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மஞ்சு விஷ்ணுவிற்கு ஜோடியாக சகுனி நாயகி பிரணித்தா நடித்து வருகின்றார். 24 பரமேஸ் பேக்டரி நிறுவனத்தின் கீழ் நடிகர் மஞ்சு விஷ்ணு தயாரிக்கும் இப்படத்திற்காக அவர் தாய்லாந்து நட்டிற்குச் சென்று சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டாராம். இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாம். இப்படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட்ட வேண்டும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.