'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'இதிகாசா' படத்தில் கிட்டத்தட்ட ஒரு ஆண்பிள்ளை போல நடித்து, சண்டைக்காட்சிகளில் சூறாவளியாய் சுழன்ற அனுஸ்ரீயை பார்த்து வாய்பிளக்காதவர்கள் இருந்தால் ஆச்சர்யம் தான். வழக்கமான கதாநாயகிகளில் இருந்து இந்த கேரக்டர் முற்றிலும் மாறுபட்டு இருந்தது தான் அதற்கு காரணம். 'வெடி வழிபாடு' படத்தில் கூட தன்னிடம் வாலாட்டும் டிவி சேனலின் சி.இ.ஓவை பளாரென்று அறையும் புதுமைப்பெண்ணாக நடித்து அசத்தினார் அனுஸ்ரீ.
இப்போது லேட்டஸ்ட் நியூஸ் என்னவென்றால் பிரபல இயக்குனர் சிபிமலயில் இயக்கும் 'சைகல் பாடுகிறயானு' என்கிற படத்தில் நடிக்க அனுஸ்ரீக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. சைகல் என்பது பிரபல பின்னணி பாடகர் ஒருவரின் பெயர் என்றாலும், அவருக்கும் கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லையாம்.. படத்தின் கதாநாயகனாக நடிப்பவர் டாம் சாக்கோ.. யெஸ்.. போதைப்பொருள் வழக்கில் கைதாகி, தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அதே சாக்கோ தான். இவரும் அனுஸ்ரீயும் ஏற்கனவே 'இதிகாசா' படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் தான்.
இவர்கள் இருவருக்கும் ஒர்க் அவுட்டான அற்புதமான கெமிஸ்ட்ரியை பார்த்து தான் இவர்கள் இருவரையும் தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் சிபிமலயில். ஜெயிலுக்கு போய் வந்தவருடன் நடிக்க தயக்கமில்லையா என கேட்டால், “போலீசார் அவர் மேல் கேஸ் தானே போட்டிருக்கிறார்கள்.. அதனாலேயே அவர் குற்றவாளி ஆகிவிடுவாரா என்ன.? அவ்வளவு பெரிய இயக்குனரே அவர் மீது நம்பிக்கை வைத்து ஒப்பந்தம் செய்யும்போது கூட நடிப்பதில் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது..? ஒன்றுமேயில்லை.. நாங்கள் இருவரும் ஏற்கனவே நண்பர்கள் தானே” என்கிறார் அனுஸ்ரீ தைரியமாக.