'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் அப்பாடக்கர். ஜெயரம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி நடிக்கிறார்கள். சுராஜ் இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது படத்தில் புதிதாக ஒரு குத்துப்பாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. "குத்து சாங்கு மாமே...ஹிட்டு சாங்கு மாமே..." என தொடங்கும் இந்தப் பாடலை தமன் இசையில் சிம்பு பாடி உள்ளார்.
இதற்காக தமனின் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வந்த சிம்புவை தயாரிப்பாளர் முரளிதரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஒரே இரவில் பாடிக் கொடுத்துவிட்டு சென்றார் சிம்பு. இந்த பாடலுக்கு ஜெயம்ரவி, த்ரிஷா ஆட உள்ளனர். "படத்தின் எல்லா பாடல்களுமே தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஜாலியான குத்துப்பாட்டுக்கு சிம்பு தேவைப்பட்டார். அவரை அழைத்து பாட வைத்திருக்கிறோம். இது சிம்புவின் பாடல்களில் டாப் லிஸ்டில் இடம் பிடிக்கும்" என்கிறார் இசை அமைப்பாளர் தமன்.