மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் விஷால் சில நாட்களுக்கு முன்பிருந்து பல அதிரடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். முதலில் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கியவர் கடந்த ஞாயிறு அன்று தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களுடன் இனி நிரந்தரத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாகவும் அவர்களிடையே பேசினார். நடிகர் சங்கம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி அன்று வெளிப்படையாக அறிவித்து மீண்டும் நடிகர் சங்கம் பற்றிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
அதோடு இத்தனை நாட்களாக அவருடைய விஷால் பிலிம் பேக்டரியின் டிவிட்டர் கணக்கிலேயே தன்னுடைய படங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்தவர் புதிதாக 'vishalkofficial' என்ற புதிய டிவிட்டர் கணக்கை ஆரம்பித்துள்ளார். ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே சுமார் 10000க்கும் மேற்பட்டோர் விஷாலின் டிவிட்டர் கணக்கை தொடர ஆரம்பித்துள்ளனர். இப்படிப்பட்ட வரவேற்புக்கு மிகவும் நன்றி தெரிவித்து அதையே ஒரு வீடியோ பதிவாகவும் விஷால் போட்டிருக்கிறார். விஷால் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'பாயும் புலி' படம் செப்டம்பர் மாதம்தான் திரைக்கு வர உள்ளது. இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக அவரும் ஏதாவது ஒரு தகவலை டிவிட்டரில் போட்டுத்தான் வருகிறார். ஆரம்பிக்கும் போது எல்லாம் நல்லாதான் ஆரம்பிக்கிறார்கள், போகப் போகத்தான் அப்படியே விட்டு விடுகிறார்கள். விஷால் எப்படி ரசிகர்களுடன் 'கனெக்ட்டில்' இருப்பார் என்பது போகப் போகத்தான் தெரியும்.