மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அனிருத்துடன் நட்பு வளர்ந்து வந்தபோது தனக்கு மேனேஜர்கூட வைத்துக்கொள்ளவில்லை ஆண்ட்ரியா. எந்த விசயமாக இருந்தாலும் தானே டீல் பண்ணிவந்தார். ஆனால் அதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பரவலாக நடிக்கத் தொடங்கியபோது ஒரு மேனேஜரை நியமித்திருந்தார்.
ஆனால், அந்த சமயத்தில் அனிருத்துடன் அவர் உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு தன்னை சுற்றி இருந்த அத்தனை ஆண்களையும் விரட்டியடித்து விட்டார் ஆண்ட்ரியா.
அதன்பிறகு தனது கால்சீட் பார்ப்பதற்காக ஒரு பெண் மேனேஜரை நியமித்தார் ஆண்ட்ரியா. இப்போதுவரை அவர்தான் ஆண்ட்ரியா பற்றிய அனைத்து விசயங்களையும் டீல் பண்ணுகிறார். இதேபோல், மற்ற உதவியாளர்களையும் பெண்களாகவே நியமித்திருக்கும ஆண்ட்ரியா, இப்படி தன்னை சுற்றி பெண்களை வைத்துக்கொண்ட பிறகுதான் சர்ச்சையான செய்திகள் எதுவும் வெளிவரவில்லையாம். இதனால் இதையே இனி தொடரப்போகிறாராம்.