'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
கானா பாலாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதும், அவ்வப்போது சில புதிய கானா பாடகர்களும் என்ட்ரியாகி ஹிட் பாடல்களை கொடுத்து விடுகிறார்கள். அதிலும் அநேகன் படத்தில் டங்காமாரி பாடலை பாடிய மரண கானா விஜி தற்போது கானா பாலாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், எப்போதுமே ஓடுற குதிரைகளின் முதுகில் ஏறியே சவாரி செய்யும் சினிமா உலகினர், தன்னை கழட்டி விட்டுவிட்டு புதிதாக ஓடத்தொடங்கியிருக்கும் மரண கானா விஜியை நோக்கி ஓடத் தொடங்கி விடுவார்களோ என்பதில் ஏற்பட்ட அதிர்ச்சிதான் அது.
அதன்காரணமாக அவரிடத்தில் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள. அதாவது, ஒரு பாட்டு பாட வேண்டும் என்று அழைத்தாலே பல நாட்களாக இழுத்தடித்து விட்டுத்தான் ரெக்கார்டிங் தியேட்டர் பக்கம் செல்வாராம் கானா பாலா. ஆனால் இப்போது அப்படியில்லையாம். போன் செய்தாலே இதோ கிளம்பிட்டேன் என்று சொல்பவர், அடுத்த அரை மணி நேரத்தில் ஆஜராகி விடுகிறாராம். மேலும், தொழிலும் சின்சியாரிட்டி அதிகமாகி விட்டதாம். அதிக நேரம இழுத்தடிக்காமல் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திலேயே ஒரு பாட்டை பாடிக்கொடுத்து விடுகிறாராம் மனிதர்.