மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் என ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் நடிக்கும் புலி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புலி படத்தை விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட உள்ளனர்.
அதற்கு முன் புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளனர்.
கடந்த பொங்கல் அன்றே புலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என சொல்லப்பட்டது.
ஆனால், அப்போது புலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவில்லை. மாறாக புலி என்ற டைட்டிலை மட்டுமே அறிவித்தனர்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியான தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று புலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டே தீருவது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் அடிபடுகிறது. புலியின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட இதுதான் சரியான தருணம் என்று விஜய்யும் கருத்து தெரிவித்திருக்கிறாராம். அவரது விருப்பத்தின்படியே பிலி ஃபர்ஸ்ட்லுக்குக்கு நாள் குறித்துள்ளனர். அதே சமயம், இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
ஏப்ரல் 14 ஆம் தேதியான தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று புலியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட உள்ளதை அதற்கு முந்தைய தினம்தான் அறிவிக்க இருக்கிறார்கள்.