ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
திருமணம், திருமண மறுப்பு, பிரிந்தவருடன் சேர்ந்து மீண்டும் நடிப்பு என பிரச்னைகளில் சுற்றி வந்த சுஜிபாலா. இப்போது முழு நேர குத்தாட்ட நடிகையாகிவிட்டார். மகேந்திரன், மனிஷாஜித் நடிக்கும் விந்தை என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதுவும் போலீஸ் நிலையத்திற்குள்.
கதைப்படி மகேந்திரனும், மனிஷா ஜித்தும் காதலுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கே இருப்பார்கள். அப்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு வருகிறார் சுஜிபாலா உள்ளிட்ட சில பெண்கள். அவர்களை எச்சரிக்கை செய்யும் இன்ஸ்பெக்டர் மகாநதி சங்கர். இனிமே தொழில் செய்யக்கூடாது என்று எச்சரித்து வந்ததுக்கு ஒரு ஆட்டத்தை போடுங்க என்பார். உடனே சுஜிபாலாவும், அவருடன் வந்த பெண்களும் குத்தாட்டத்தை போட்டுவிட்டுச் செல்வார்களாம். பாடல் காட்சி சென்சாருக்கு தப்பி வருமா என்று தெரியவில்லை.
சுஜிபாலா கையில் இப்போது 5 படங்கள் இருக்கிறதாம். அதில் இரண்டில் கேரக்டர் ரோலில் நடிக்கிறார். மூன்றில் குத்தாட்டம் போடுகிறார்.