மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, ஜில்லா படங்களுக்குப்பிறகு எக்குத்தப்பாக சம்பளம் கேட்டதால் கோலிவுட் தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டு டோலிவுட்டுக்கு சென்றார் காஜல்அகர்வால். யவடு, கோவிந்துடு அந்தாரிவாடலே, டெம்பர் ஆகிய படங்களில் நடித்தார். அதோடு, கவர்ச்சி மழையும் பொழிந்தார். ஆனால் அவர் வரிந்து கட்டி நடித்த அந்த படங்கள் எதிர்பார்த்தபடி காஜலுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்து தனுசுடன் மாரி படத்தில் நடித்துக்கொண்டிருப்பவர், அடுத்தபடியாக சுசீந்திரன் இயக்கும் விஷால் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து, அரிமா நம்பி டைரக்டர் ஆனந்த் சங்கர் விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர இரண்டு இந்தி படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். ஆக பிசியாகி விட்டார் காஜல்.
இந்த நிலையில், அவர் எந்த படப்பிடிப்பு தளங்களுக்கு வந்தாலும் அவரைச்சுற்றி ஒரு கூட்டமே மொய்த்துக்கொண்டிருக்கிறது. யார் இவர்களெல்லாம்? என்று விசாரித்தால், அவர்கள் அத்தனை பேரும் காஜலின் உதவியாளர்கள் என்கிறார்கள். அந்த வகையில், மேக்கப்மேன், காஸ்டியூமர், டச்சப் போன்று பலர் இருந்தும், தனது எடுபிடி வேலைகளுக்காக மட்டுமே 6 பேரை உதவியாளர்களாக வைத்திருக்கிறார் காஜல்அகர்வால். இதனால் காஜல் மற்றும் அவரது உதவியாளர்களுக்கான உணவு, தங்கும் செலவுகளே ஒரு பெருந்தொகை ஆகி விடுகிறதாம்.