மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடித்த முதல்படமான பென்சில் திரைக்கு வருவதற்கு முன்பு டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களிலும் கமிட்டானார். ஆனால், பென்சில் கொஞ்சம் டல்லடிக்கவே அதன்பிறகு அவர் நடித்த டார்லிங் முதலில் திரைக்கு வந்தது. அதோடு, வெற்றியும் பெற்றது. அதனால் ஜி.வி.பிரகாஷின் மற்ற படங்களில் படப்பிடிப்பு வேகமாக தொடங்கியிருக்கிறது. இந்த நிலையிலும், அவர் படங்களுக்கு இசையமைப்பதையும் விடவில்லை. இசையமைத்துக்கொண்டே நடித்து வருகிறார். அவர் இசையமைத்துள்ள கொம்பன் படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்துக்கு இசையமைக்க எனக்கு குறைந்த நாட்களே கொடுத்தார்கள். ஆனபோதும், இழுத்தடிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் இசையமைத்துக்கொடுத்தேன்.