மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கன்னடத்தில் சமீபத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்து வெளியான 'மைத்ரி' படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இதன் சிறப்பம்சமே இந்தப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மோகன்லால். இந்தப்படத்தில் அவருக்கு விஞ்ஞானி கதாபாத்திரம். கதையில் தனக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் எந்த நடிகருடனும், எந்த மொழியிலும் நடிக்கத் தயாராக இருப்பவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். 'ஜில்லா' படத்தில் விஜய்யுடன் கைகோர்த்து நடித்ததும் அந்தவகையில் தான்.
கிரிராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்க, முக்கிய வேடத்தில் அது குல்கர்னி நடித்திருக்கிறார். படத்திற்கு இசையமைத்துள்ளவர் நம்ம இசைஞானி இளையராஜா. இந்தப்படத்திற்காக மோகன்லாலே கன்னடத்தில் டப்பிங்கும் பேசியிருந்தார். இந்தப்படம் இப்போது மலையாளத்திலும் டப்பிங் ஆகிறது. ஆனால் புனீத் மலையாளத்தில் டப்பிங் பேசவில்லை.