ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படம் ஏப்ரல் மாதம் வௌிவர இருக்கிறது. இப்படத்தில் சவுண்ட் மிக்ஸராக பணியாற்றி இருக்கிறார் ஹாலிவுட் கலைஞர் கிரேக் மென். சமீபத்தில் நடந்த 87வது ஆஸ்கர் வழங்கும் விழாவில், விப்லாஸ் படத்தில் சிறந்த சவுண்ட் மிக்ஸிங் பணிக்காக, கிரேக்மென், ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இதற்காக கிரேக்கிற்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் கமல்.
இதுகுறித்து கமல் கூறியிருப்பதாவது, கிரேக்கின் சிறப்பான பணிக்காக அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இது அவருக்கான அங்கீகாரம். விப்லாஸ் படத்தில் நாங்கள் பணியாற்றவில்லை என்றாலும் நாங்கள் பணி செய்தது போன்று உணர்கிறோம். மேலும் அவர் வாங்கிய ஆஸ்கர் விருது, நாங்கள் வாங்கியது போன்ற உணர்வை தருகிறது. கிரேக்கிற்கும், அவரது குழுவுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.