மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
2000 ஆண்டில் விஷ்ணுவுடன் காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்தவர் பூஜாகுமார். ஆனால் பின்னர் அவரை கோலிவுட் கண்டுகொள்ளவில்லை. அதனால் ஒரு பதிமூன்று ஆண்டுகளாக ஆங்கில படங்களில் நடித்து வந்த அவரை மீண்டும் விஸ்வரூபம் படத்துக்காக கோடம்பாக்கத்துக்கு கொண்டு வந்தார் கமல்.
அதோடு நில்லாமல், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் ஆகிய படங்களிலும் பூஜாகுமாரை நடிக்க வைத்தார் கமல். ஆனால் அதையடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால் மீண்டும் லண்டன் திரும்பி விட்ட பூஜாகுமார், அங்குள்ள ஒரு பிரபல டி.வி சேனலில் நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கி வருவதோடு, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறாராம். அந்த வகையில், சினிமாவை விட சின்னத்திரையில்தான் பூஜாகுமார் ரொம்ப பிசி என்கிறார்கள்.