மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவில் கொழுகொழுவென அழகுடன் பவனிவந்தவர் நடிகை அனன்யா. இவர் அழகில் மயங்கிய ஆஞ்சநேயன் அம்மணியை, திருமணம் செய்து கொண்டார். இதனால் அனன்யா சினிமாவிற்கு முழுக்குப் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிறகு ஆஞ்சநேயரின் சம்மதத்தோடு ஒரு சில படங்களில் முகம் காட்டினார். குறிப்பாக சமீபத்தில் திரைக்கு வந்த புலிவால் படத்தில் விமலுடன் டூயட் பாடி ஆட்டம் போட்டார். இது ஆஞ்சநேயருக்கு பிரசரை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உண்டாகி சில நாள் பேச்சுவார்த்தை இல்லாமல் கோபம் கொண்ட காதலர்களாக இருந்துள்ளனர். இதுபற்றி அனனயாவிடம் கேட்டதற்கு தமிழில் எந்த படமும் கமிட் பண்ணிக்கல. நல்ல படங்கள் வந்தால் ஆஞ்சநேயரின் அனுமதியோடு நடிப்பேன். மற்றபடி வரக்கூடிய படங்களை எல்லாம் ஒத்து கொள்ளவில்லை. இதே போல மலையாளத்திலும் எனக்கு யாரும் தடைவிதிக்க முடியாது. சினிமா என்பது என் விருப்பத்தை பொருத்தது என்கிறார்.