Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலாஜி சக்திவேல் படத்தில் ஐஸ்வர்யா தத்தா!

12 பிப், 2015 - 11:18 IST
எழுத்தின் அளவு:

சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் மற்ற டைரக்டர்களைப் போன்று மொத்த கதையையும் ரெடி பண்ணி விட்டு படப்பிடிப்பில் இறங்குவதில்லை. ஒரு கருவை ரெடி பண்ணிக்கொண்டு படமாக்கத் தொடங்குபவர், அந்த கதை போகும் போக்கிலேயே சென்று கடைசியில்தான் க்ளைமாக்ஸை எப்படி பண்ணலாம் என்று யோசிப்பார்.


அதேபோல்தான், இப்போது இயக்கி வரும் ரா ரா ராஜசேகர் என்ற படத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் மதி என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் டைரக்டர் லிங்குசாமியின் அக்கா மகனாம். அவருக்கு ஜோடியாக சகிதா பானு நடிக்கிறார். ஆனால் இன்னொரு நாயகியை முன்பு யோசிக்காத பாலாஜி சக்திவேல், இப்போது அந்த கதையில் இன்னொரு நாயகி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று படத்தை தயாரிக்கும் லிங்குசாமியுடம் கூறியுள்ளாராம்.


அதன்காரணமாக, கடந்த சில மாதங்களாக கதைக்கேற்ற இன்னொரு நாயகியை தேடி வந்த அவர், தற்போது தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தாதை அந்த இன்னொரு நாயகி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். அதனால் இன்னும் சில தினங்களில் ஆடிசன் வைத்து அவரை ஒப்பந்தம் செய்ய அழைப்பு விடுத்திருக்கிறாராம் பாலாஜி சக்திவேல். அதனால் நேற்று முன்தினம் தமிழுககு எண் 1ஐ அழுத்தவும் படத்தின் பிரஸ்மீட்டுக்காக சென்னை வந்து விட்டு, நேற்று இரவு 8 மணிக்கு விமானத்தில் கோல்கட்டா சென்ற ஐஸ்வர்யா தத்தா, இன்னும் 3 நாட்களுக்குப்பிறகு மீண்டும் சென்னை திரும்புகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in