மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
''அன்னக்கொடி'' படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் லட்சுமணன். முதல்படம் அவருக்கு வெற்றியை தரவிட்டாலும், ஜீவா படம் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்று தந்தது. தற்போது, ''கிட்ணா'' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் லட்சுமணன், நம்மிடம் பேசியதாவது, பாரதிராஜா படத்தில் அறிமுகமானது தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் முகவரி. சுசீந்திரன் இயக்கத்தில் வௌிவந்த ஜீவா படம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று தந்தது. இதனையடுத்து சமுத்திரகனியின் ''கிட்ணா'' படத்தில் அவரது மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னால் முடியும் என்று நம்பி என்னை நடிக்க வைத்தால், சிறந்த நடிப்பை என்னால் வௌிப்படுத்த முடியம். நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன், ஏனென்றால் நான் கூச்ச சுபாவம் உடையவன். நல்ல வாய்ப்பிற்காக மட்டுமே காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.