மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இல்லற வாழ்வில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். ஆல்பம் படத்தில் இடம்பெற்ற செல்லமே செல்லம்... பாட்டின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா கோஷல், தொடர்ந்து தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், பரத்வாஜ் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
இந்நிலையில் இவர் தொழிலதிபர் சில் ஆதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணம் நேற்று(பிப். 5ம் தேதி) இரவு நடந்ததாக ஸ்ரேயா கோஷல் தனது டுவிட்டர் வலைபக்கத்தில் தெரிவித்துள்ளார்.