மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தின் மூலம், தமிழில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிமுகமாக உள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் மஞ்சு வாரியர். நடிகர் திலீப் உடனான மணவாழ்க்கையால், நடிப்புக்கு முழுக்கு போட்டார். பதினாறு வருடங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இல்லற வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீசியது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இரு தினங்களுக்கு முன்பு கோர்ட், அவர்களுக்கு விவகாரத்து வழங்கியது.
இதையடுத்து, மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார். மலையாளத்தில், அவர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படம், பெரும்வெற்றி பெற்றது. இப்படம், தமிழில் ரீமேக் ஆக உள்ளது. மஞ்சு வாரியர் கேரக்டரில், ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்தை, நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.