மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நேற்று (ஜன 25) தேர்தல் நடந்தது. இதில் கலைப்புலி எஸ். தாணு தலைமையிலான அணியினர் அமோக வெற்றி பெற்றனர். துணைத் தலைவர் தேர்தலில் மட்டும் தாணு அணியைச் சேர்ந்த சீனிவாசன் தோல்வி அடைந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட பைவ் ஸ்டார் கதிரேசன் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முழு விபரம் வருமாறு:
தலைவர்: கலைப்புலி எஸ்.தாணு
துணை தலைவர்கள்: பி.எல்.தேனப்பன், பைவ் ஸ்டார் கதிரேசன்
கவுரவ செயலாளர்கள்: டி.சிவா, ராதாகிருஷ்ணன்
பொருளாளர்: சத்யஜோதி தியாகராஜன்
செயற்குழு உறுப்பினர்கள்: ஆர்.கே.செல்வமணி, சங்கிலி முருகன், கோவைத்தம்பி, பவித்ரன், சித்ரா லட்சுமணன், வி.சேகர், அழகன் தமிழ்மணி, எடிட்டர் மோகன், சவுந்தர், மன்னன், ஆர்.வி.உதயகுமார், சுபாஸ் சந்திர போஸ், விஜயமுரளி, மாதேஷ், கலைப்புலி சேகரன், எச்.முரளி, ரிஷிராஜ், ஜப்பார், பிரமிட் நடராஜன், சுப்பையா, மனோஜ் குமார். இவர்களில் கலைப்புலி ஜி.சேகரன், ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார் தவிர மற்ற 18 பேரும் தாணு அணியைச் சேர்ந்தவர்கள்.
வெற்றி பெற்ற அனைவரும் இன்று(ஜன 26) மாலை 6 மணிக்கு கோயம்பேடு அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கும் விழாவில் பதவியேற்கிறார்கள். இவர்கள் 2015-2017ம் ஆண்டுகளில் பதவியில் இருப்பார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு சினிமா பிரபலங்களும், மற்ற சங்க நிர்வாகிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.