'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
சமூக வலைத்தளங்களில் நாயகர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதைவிட பல மடங்கு வரவேற்பு நாயகிகளுக்குத்தான் இருக்கும். சாதாரணமான சமூக வலைத்தளங்களில் கணக்கு ஆரம்பிக்கும் பெண்களுக்கு பல ஆயிரம் பேர் ஃபாலோயர்களாகத் தொடர்வது வழக்கம். ஆனால், ஆண்கள் அப்படி ஆரம்பித்தால் நூறு பேர் வந்தாலே பெரிய விஷயம்.
அப்படியிருக்க நடிகைகள் என்றால் சும்மாவா...ஹன்சிகாவும் தற்போது டிவிட்டரில், 10 லட்சம் ஃபாலோயர்களைப் பெற்றுள்ள நடிகையாக 1 மில்லியன் கிளப்பில் இணைந்து விட்டார். சில நாட்களுக்கு முன்னர்தான் நடிகை சமந்தாவும் 1 மில்லியன் கிளப்பில் இணைந்தார். த்ரிஷா, ஸ்ருதிஹாசன் ஆகியோரும் ஏற்கெனவே 1 மில்லியன் கிளப்பில் உள்ளார்கள்.
தமிழ் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் இருந்தாலும் இன்னமும் விக்ரம், சூர்யா, கார்த்தி, அஜித் போன்றோர் இணையாதது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது. நடிகர்களில் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர்தான் டிவிட்டரை அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு ஆரம்பித்தார், அதன் பின் அவருடைய பிறந்த நாளன்று மீண்டும் அவருடைய கணக்கைத் தூசித் தட்டினார். மீண்டும் அதை தற்காலிகமாக துண்டித்து விட்டார்.
கமல்ஹாசன் ஃபேஸ்புக்கில் மட்டுமல்லாது சொந்தமாக யு டியூப் வீடியோ இணையதளத்திலும் கணக்கு ஒன்றைத் துவக்கி வீடியோ பேட்டிகளாக கொடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார். எந்த தொழில் நுட்பம் வந்தாலும் அதை முழுமையாகவும், சரியாகவும் பயன்படுத்திக் கொள்பவர் கமல்ஹாசன் மட்டுமே...